ADDED : அக் 22, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஐப்பசி அமாவாசையில், சிவபெருமானை அடைய வேண்டி பார்வதி தேவி கடைப்பிடித்து தொடங்கி வைத்தது கேதார கவுரி விரதம். அதன்படி கணவரின் நீண்ட ஆயுள், குடும்ப நன்மை வேண்டி ஏராளமான பெண்கள் விரதமிருந்தனர்.
அவர்கள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், பூ, அதிரசம், பல வண்ண நோன்பு கயிறு, மஞ்சள், குங்குமத்தை, குடும்பத்துடன் எடுத்து வந்து, சேலம், பஜார் தெருவில் உள்ள காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று, கவுரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
தொடர்ந்து பெண்களே, உற்சவர் அம்மனுக்கு பூக்களை சார்த்தி, மஞ்சள், குங்குமம் வைத்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
பின் பெண்கள் அனைவரும் நோன்பு கயிறுகளை கட்டிக்கொண்டு, கோவிலை வலம் வந்தனர். மேலும் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டி வழிபட்டனர்.