/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய 'போதை' கும்பலில் 3 பேர் கைது
/
பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய 'போதை' கும்பலில் 3 பேர் கைது
பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய 'போதை' கும்பலில் 3 பேர் கைது
பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய 'போதை' கும்பலில் 3 பேர் கைது
ADDED : அக் 22, 2025 01:09 AM
சேலம், தீபாவளியை ஒட்டி, சேலம், சாமிநாதபுரம் வண்டிப்பேட்டையில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, மக்கள் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 39, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, கே.டி.எம்., பைக்கில் வேகமாக வந்தவர், சுரேஷ் மீது மோதுவது போல் சென்றார்.
சுரேஷ், அருகே வசிக்கும் மணிகண்டன், பைக்கை மறித்து, மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தினார். அதில் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, பைக்கில் வந்த வாலிபர் உள்பட, 4 பேர், சுரேஷ் வீடு முன் சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். தொடர்ந்து தகராறு ஏற்பட, மக்கள் கூடி பேச்சு நடத்தினர். அப்போது, அந்த, 4 பேரும் சேர்ந்து, அங்கிருந்த பெண்களையும் தகாத வார்தையில் பேசி ரகளையில் ஈடுபட்டனர். மணிகண்டன் மீது பீர் பாட்டிலால் தாக்கினர்.
மக்கள் தகவல்படி, பள்ளப்பட்டி போலீசார் வந்து விசாரித்ததில், சாமிநாதபுரம், பெரியகிணறு தெருவை சேர்ந்த கார்த்தி, 19, இன்பராஜ், உதயகுமார், 19, அரிசிபாளையம், சின்னப்பன் தெரு சஞ்சய், 18, என்பதும், போதையில் தகராறில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதனிடையே இன்பராஜ், அங்கிருந்து சென்றுவிட, மற்ற, 3 பேரை போலீசார் கைது செய்தனர். இன்பராஜை தேடுகின்றனர்.