/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைமறைவாக இருந்த 3 பேர் சுற்றிவளைப்பு
/
தலைமறைவாக இருந்த 3 பேர் சுற்றிவளைப்பு
ADDED : ஜன 22, 2026 04:47 AM
சேலம்: சேலம், தாதகாப்பட்டி, அம்பாள் ஏரி சாலையை சேர்ந்தவர், வளத்தி மணி என்ற மணிகண்டன், 43. இவர், 2021ல் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து தலை-மறைவானார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடக்கும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். நீதி-மன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் செவ்வாய்ப்-பேட்டை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர். இந்நி-லையில், நேற்று வீட்டில் இருந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் கிச்சிப்பாளையம், புது சுண்ணாம்பு சூளையை சேர்ந்த நடராஜ், 22, என்பவர், 2023ல் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்து தலைமறைவானனார். பச்சப்பட்டியை சேர்ந்த மிதன்குமார், 21, என்பவரும் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்து விசாரணைக்கு ஆஜராகவில்லை. இருவருக்கும் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் கிச்சிப்பாளையம் போலீசார்,
இருவரையும் நேற்று கைது செய்தனர்.

