/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாப்பிட்டதற்கு பணம் தராமல் மாஸ்டரை தாக்கிய 3 பேர் கைது
/
சாப்பிட்டதற்கு பணம் தராமல் மாஸ்டரை தாக்கிய 3 பேர் கைது
சாப்பிட்டதற்கு பணம் தராமல் மாஸ்டரை தாக்கிய 3 பேர் கைது
சாப்பிட்டதற்கு பணம் தராமல் மாஸ்டரை தாக்கிய 3 பேர் கைது
ADDED : ஆக 08, 2025 01:29 AM
சேலம், சேலம், லைன்மேடு, புது தெருவை சேர்ந்தவர் பாண்டி, 38. அன்னதானப்பட்டி, சண்முகா நகர், ராஜகாளியம்மன் கோவில் எதிரே உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, அங்கு வந்த கும்பல் சாப்பிட்ட பின், பணம் தராமல் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து, பாண்டி பணம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த கும்பல், விறகு கட்டையால் பாண்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். படுகாயமடைந்த பாண்டி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரணையில், உத்தமசோழபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், 21, தாதகாப்பட்டி தினேஷ்குமார், 21, மற்றும் 18 வயது சிறுவன் என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடுகின்றனர்.