/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் முன்விரோதம் பெண்களை தாக்கிய 3 பேர் கைது
/
விபத்தில் முன்விரோதம் பெண்களை தாக்கிய 3 பேர் கைது
ADDED : ஆக 28, 2025 01:21 AM
சேலம், சேலம், பள்ளப்பட்டி, வண்டிப்பேட்டை, சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மேரி, 30. இவர் உள்பட, 3 பேர், கடந்த, 24ல், 'ஸ்கூட்டி' மொபட்டில் பள்ளப்பட்டி ஏரிக்கரையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதுதொடர்பாக மேரியின் தம்பி செந்தில்குமார் விசாரிக்க சென்றபோது, அங்கிருந்த தியாகராஜன் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. மறுநாள் தியாகராஜன், அவரது உறவினர்கள், மேரி வீட்டுக்கு சென்று, அங்கிருந்தவர்களை கட்டையால் தாக்கினர். இதை அறிந்து மேரி, அங்கு சென்றதும், அவரிடமும் தகராறு செய்துள்ளனர்.
இதில் காயமடைந்த ரோசி, 25 சம்பூரணம், 75, ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் பிரபு, 41. பத்மாவதி, 45, பிருந்தா, 24, ஆகியோரை கைது செய்து, தியாகராஜன் உள்பட சிலரை தேடுகின்றனர்.