/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காட்டுப்பன்றி வேட்டைக்கு முயன்ற 3 பேர் கைது
/
காட்டுப்பன்றி வேட்டைக்கு முயன்ற 3 பேர் கைது
ADDED : பிப் 16, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: தம்மம்பட்டி வனச்சரகம் மண்மலை, ரெட்டிகுட்டையில் நேற்று வெடி சத்தமரழ் கேட்டது. இதனால் அப்பகுதியில் வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, 3 பேர் இருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில், அதே பகு-தியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், 41, அர்ஜூன், 31, அஜீத், 27, என்பதும், காட்டுப்பன்றி வேட்டையாட முயன்றதும் தெரிந்-தது. அவர்களிடம், நாட்டு வெடிகள் பறிமுதல் செய்த வனத்து-றையினர், 3 பேரையும் கைது செய்தனர்.

