/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபரை பைக்கில் கடத்தி தாக்கிய 3 பேருக்கு வலை
/
வாலிபரை பைக்கில் கடத்தி தாக்கிய 3 பேருக்கு வலை
ADDED : செப் 18, 2025 02:23 AM
சேலம், :சேலம், திருமலைகிரி இடும்பன் வட்டத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். வேடுகாத்தான்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன், 32. இவர்கள் இடையே சில மாதங்களுக்கு முன், பாறைவட்டம் அங்காளம்மன் கோவில் பண்டிகையின்போது மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் இரும்பாலை, கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் மோகன்ராஜ், அவரது வீட்டில் இருந்தார். நண்பர் சிவானந்தன் உடனிருந்தார். அப்போது காளியப்பன், தங்கராஜ், 30, சூர்யா, 26, உள்பட சிலர் வந்து, மோகன்ராஜ், சிவானந்தத்தை தாக்கினர். தொடர்ந்து இருவரையும், பைக்கில் கடத்திச்சென்றனர்.
பின் வேடுகாத்தான்பட்டி அம்மன் கோவிலில் வைத்து, இருவரையும் தாக்கினர். கத்தியால் மோகன்ராஜ் தலையில் வெட்டியுள்ளனர்.
இருப்பினும் அங்கிருந்து இருவரும் தப்பினர். பலத்த காயத்துடன் மோகன்ராஜ், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவர் புகார்படி, இரும்பாலை போலீசார், 3 பேரை தேடுகின்றனர்.