மாட்டு பண்ணை தொழிலாளியை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
மாட்டு பண்ணை தொழிலாளியை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
ADDED : ஜூலை 24, 2026 01:52 AM
சேலம்: சேலத்தில், மாட்டு பண்ணை தொழிலாளியை பணம் கேட்டு கடத்திய சிறுவன் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்-தவர் சண்முகம், 46. இவர் அதே பகுதியில் உள்ள, லோகநாயகி என்பவரின் மாட்டு பண்ணையில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் மாட்டுத்தீவனம் வாங்கி வருவதற்காக, சண்முகம், டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில் செவ்வாய்பேட்டை சென்-றுள்ளார். லீபஜார் பாலம் அருகே, திடீரென நான்கு பேர் அவரை சுற்றி வளைத்து, டூவீலரில் கடத்தி சென்றனர். அன்னதானப்பட்-டியில் ஒரு இடத்தில் வைத்து, லோகநாயகிக்கு போன் செய்து, 1.25 லட்சம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்து விட்டு, சண்மு-கத்தை அழைத்து செல்லுங்கள் என மிரட்டியுள்ளனர். மேலும் பணத்தை, அரிசிபாளையம் ராஜம்மாள் திருமண மண்டபம் அருகில் எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து அளித்த புகார்படி, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்-திரமோகன் தலைமையிலான போலீசார், லோகநாயகியை அழைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு, மறைந்திருந்தனர். போலீசார் இருப்பதை தெரிந்து கொண்ட, கடத்தல் நபர்கள் தப்பியோடினர். அதில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், லீபஜார் பாலத்தின் அடியில் தள்ளி விடப்பட்டு, படுகாயங்களுடன் இருந்த சண்முகம் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்-கப்பட்டார்.
கடத்தலில் ஈடுபட்ட அன்னதானப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்த சதாசிவம், 54, பொடாரங்காடு பகுதியை சேர்ந்த திவாகர், 19, மற்றும் 17 வயது சிறுவன் என, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
