/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதுச்சேரி மதுபாட்டில்கள் ï¦Ýகடத்திய 3 பேர் கைது
/
புதுச்சேரி மதுபாட்டில்கள் ï¦Ýகடத்திய 3 பேர் கைது
ADDED : செப் 04, 2025 01:36 AM
சேலம், சேலம் மதுவிலக்கு போலீசார், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, காரிப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்னாம்பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த கன்டெய்னர் லாரி, மாருதி 800 காரை சோதனை செய்தபோது, புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தன. மேலும் லாரியில் இருந்து காருக்கு மதுபாட்டில்களை மாற்றியதும் தெரியவந்தது.
இதனால் போலீசார், கார், லாரியை கைப்பற்றி, சூரமங்கலம் மது ஒழிப்பு அலுவலகத்துக்கு கொண்டு வந்து, லாரி டிரைவர், காரில் வந்தவர்களிடம் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
வாஷிங் மிஷின் ஏற்றிக்கொண்டு சேலம் வந்த லாரியில், மதுபாட்டில்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. லாரி டிரைவர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரை சேர்ந்த விஜயலட்சுமண குமார், 58. காரில் வந்தவர்கள், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த குமரேசன், 29, லோகநாதன், 28, மதியழகன், 27, ஆனந்தகுமார், 23, பிரகாஷ், 28.
இவர்களிடம் விசாரித்ததில், நாமக்கல் மாவட்டத்தில் நடக்க உள்ள திருமண நிகழ்ச்சியில் நண்பர்களுக்கு மது விருந்து கொடுக்க, புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். கார், 145 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விஜயலட்சுமண குமார், குமரேசன், லோகநாதனை, கைது செய்தோம். மற்றவர்களிடம் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.