ADDED : செப் 23, 2026 06:33 AM
அ நிறம் | அளவு
சேலம்:கொளத்துார்,
காந்தி நகரை சேர்ந்தவர் சின்னதுரை, 57. இவர், 2016 டிச., 16ல்,
பாலற்றிலிருந்து மினி டிப்பர் லாரியில் மணல் கடத்தியதால், கொளத்துார்
போலீசார் வழக்குப்பதிந்தனர்.
அதேபோல் கொளத்துார், அண்ணா நகர்
மூர்த்தி, 35, கொளத்துார், ரெட்டியூரை சேர்ந்த சின்னசாமி, 65, மீது,
2016, அக்., 28ல் மணல் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த
வழக்குகள் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. அதில், 3
பேருக்கும், ஒரு வார சிறை தண்டனை வழங்கி, மாவட்ட முதன்மை நீதிபதி
ஸ்வர்ணம் நடராஜன், நேற்று உத்தரவிட்டார்.
