ADDED : அக் 13, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: தாசநாயக்கன்பட்டி எஸ்.கே.சிட்டியை சேர்ந்தவர் முரளி, 50. இவர், நாழிக்கல்பட்டி ராகவேந்திரா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு கடந்த, 7ல், டைல்ஸ் கட்டிங் இயந்திரம், 2 பாலிஷ் இயந்திரம் திருடுபோனது.
இதுகுறித்து முரளி புகார்படி, மல்லுார் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து சேலம் ஊரக குற்றப்பிரிவு போலீசார், இயந்திரங்கள் திருடிய, சேலம், தாதகாப்பட்டி வேல் நகரை சேர்ந்த சரவணன், 29, அம்பாள் ஏரி சாலை கார்த்திகேயன், 31, அம்மன் நகர் மணிகண்டன், 32, ஆகியோரை நேற்று, கைது செய்தனர். அவர்களிடம், 3 இயந்திரங்களையும் மீட்டனர்.