/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் கோவில் மாட்டை திருடிஇறைச்சி கடைக்கு விற்ற 3 பேர் கைது
/
சேலத்தில் கோவில் மாட்டை திருடிஇறைச்சி கடைக்கு விற்ற 3 பேர் கைது
சேலத்தில் கோவில் மாட்டை திருடிஇறைச்சி கடைக்கு விற்ற 3 பேர் கைது
சேலத்தில் கோவில் மாட்டை திருடிஇறைச்சி கடைக்கு விற்ற 3 பேர் கைது
ADDED : நவ 03, 2025 02:29 AM
சேலம்:சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட மாட்டை திருடி, இறைச்சி கடைக்கு விற்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், ஜான்சன்பேட்டையை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் சுமான், 52. இவர், சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் வைத்த வேண்டுதல் நிறைவேறியதால், கடந்த ஆண்டு ஆடித்திருவிழாவின்போது, அம்மனுக்கு நேர்த்திக்கடனாக, அவர் வளர்த்த காளை மாட்டை, கோவிலில் விட்டு வந்தார். பின் இரு நாளுக்கு ஒருமுறை, மாட்டுக்கு தீவனம் போட்டு வந்தார். கடந்த அக்., 4ல், தீவனம் கொடுக்க, கோவிலுக்கு சென்றபோது, அங்கு மாடு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் புகார்படி, சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
தொடர்ந்து டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கோவிலில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், மூன்று பேர் திருடிச்சென்றது தெரிந்தது. மூவரும் கிச்சிப்பாளையத்தில் இருப்பது நேற்று தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்ததில், பச்சப்பட்டி, கலாம் நகர் தர்மேஷ் மொய்தீன், 26, அசோக் நகர் அலாவுதீன், 27, பொன்னாம்மாபேட்டை திப்பு நகர் சலீம், 28, என தெரிந்தது. திருடிய மாட்டை இறைச்சி கடைக்கு விற்று விட்டதும் தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், இதுபோன்று வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா என விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து பா.ஜ., சேலம் மாவட்ட ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு சார்பில், டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

