/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர் சந்தையில் ரூ.3 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
/
உழவர் சந்தையில் ரூ.3 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
உழவர் சந்தையில் ரூ.3 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
உழவர் சந்தையில் ரூ.3 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
ADDED : ஜன 16, 2024 10:04 AM
சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி இரண்டு நாளில் உழவர் சந்தைகளில், 3 கோடி ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் விற்பனை நடந்தது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அம்மாபேட்டை, ஆத்துார், மேட்டூர் உள்பட, 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இங்கு பொங்கல் பண்டிகையையொட்டி, இரு நாட்களாக காய்கறிகள் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்தது. சந்தையில் தக்காளி கிலோ, 18 முதல் 24 ரூபாய், உருளைக்கிழங்கு, 38 முதல் 56, சின்ன வெங்காயம், 30 முதல் 34, பெரிய வெங்காயம், 30 முதல் 35, பச்சை மிளகாய், 50, கத்தரி, 40, வெண்டைக்காய், 40, முருங்கைகாய், 100, பீர்க்கங்காய், 40, சுரக்காய், 20, புடலங்காய், 20, பாகற்காய், 45, தேங்காய், 35, முள்ளங்கி, 30, பீன்ஸ், 100, கேரட், 65 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கொய்யா கிலோ, 50, சப்போட்டா, 30, ஆப்பிள், 180, சாத்துக்குடி, 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள, 11 உழவர் சந்தைகளில் நேற்று, 384 டன் காய்கறிகள், பழங்கள், பூக்கள் கொண்டு வரப்பட்டன. இதை, 1 கோடியே, 45 லட்சத்து, 52 ஆயிரத்து, 430 ரூபாய்க்கு வாங்கி சென்றனர். நேற்று முன்தினம், 1 கோடியே, 61 லட்சத்து, 33 ஆயிரத்து, 740 ரூபாய்க்கு உழவர் சந்தையில் விற்பனை நடந்தது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 3 கோடியே, 6 லட்சத்து, 86 ஆயிரத்து, 170 ரூபாய்க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை நடைபெற்றதாக, உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.