ADDED : அக் 10, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், குகை பஞ்சந்தாங்கி ஏரி, முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன், 26. இவர் நேற்று முன்தினம், முனியப்பன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர், மது அருந்த பணம் கேட்டு மிரட்டி கைகளால் தாக்கி, மணிவண்ணனிடம் இருந்து, 710 ரூபாயை பறித்துக்கொண்டார். அவர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணையில், குகை, இந்திரா நகரை சேர்ந்த தீனதயாளன், 26, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் மணியனுார், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 32. இவரிடம் கடந்த, 3ல், அமானி கொண்டலாம்பட்டி, கரட்டூரை சேர்ந்த தீபக், 19, தினகரன், 23, ஆகியோர், 'போதை'யில் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து சரவணன் புகாரில், கொண்டலாம்பட்டி போலீசார், தீபக், தினகரனை கைது செய்தனர்.
