/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.ஐ.,யை தாக்கிய 3 பேர் சிக்கினர்
/
எஸ்.ஐ.,யை தாக்கிய 3 பேர் சிக்கினர்
ADDED : ஏப் 07, 2025 04:36 AM
சேலம்: சேலம், 5 ரோடு அருகே அமராவதி தெருவில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு நேற்று மாலை, 5:30 மணிக்கு தகராறு நடப்பதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு, எஸ்.ஐ., சேகர், 48, ரோந்து வாகன எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன், 50, போலீசார், சென்று விசாரித்தனர். அப்போது, சேகரை, 3 பேர் தள்ளிவிட்டு தாக்கினர். அதில் காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அழகாபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், கன்னங்குறிச்-சியை சேர்ந்த பிரமோத்ராஜ், 27, தாரமங்கலம் நரையன், 27, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் சதீஷ், 27, ஆகியோரை கைது செய்தனர். இதில் பிரமோத்ராஜின் தந்தை, சேலம், பள்ளப்-பட்டி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக உள்ளது, விசார-ணையில் தெரியவந்தது.

