/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்லுாரி பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் சிக்கினர்
/
கல்லுாரி பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் சிக்கினர்
ADDED : ஆக 14, 2025 02:43 AM
தாரமங்கலம், சேலம், கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சிவா, 27. குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரி பஸ் டிரைவராக உள்ளார். கடந்த ஜூலை, 9ல் கல்லுாரி முடிந்து, மாணவர்களை பஸ்சில் ஏற்றிக்கொண்டு, தாரமங்கலம், கோட்டைமேடு பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் சாலை நடுவே நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த அரவிந்த், செல்வராஜ், ராமு ஆகியோர், 'எங்களுக்கு வழி விடமாட்டாயா' என சிவாவிடம் கேட்டு, அவரை இறக்கி கட்டையால் தாக்கினர். செல்வராஜ், ராமு, பஸ் முன்புற கண்ணாடியை உடைத்ததில் அதன் துகள்கள், சில மாணவர்கள் மீது பட்டு காயம் ஏற்பட்டது. அவர்களை, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்து வீட்டுக்கு அனுப்பினர்.
பின் சிவா புகார்படி தாரமங்கலம் போலீசார், கடந்த ஜூலை, 10ல் வழக்குப்பதிந்தனர். ஆனால், 3 பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில் நேற்று, 3 பேரையும், கோட்டைமேட்டில் போலீசார் கைது செய்தனர்.