ADDED : ஜூலை 12, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சின்னபுதுார், தண்ணீர் கிணற்றுக்காட்டை சேர்ந்தவர் அருளானந்தம், 41. வாடகை ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு சத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார்.
அங்கு வந்த, 3 பேர், அருளானந்தத்தை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த மொபைல் போன், 5,000 ரூபாயை பறித்து தப்பினர். அருளானந்தம் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்ததில், நெத்திமேடு காளிதாஸ், 19, அன்னதானப்பட்டி அப்துார் ரசத், 23, பாவேந்தர் தெரு ஜனார்த்தனன், 19, என தெரிந்தது. மூவரையும், போலீசார் கைது செய்தனர்.