ADDED : செப் 19, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், அழகாபுரம்
மிட்டாபுதுாரை சேர்ந்தவர் சரவணன், 30. நேற்று முன்தினம்,
மிட்டாபுதுார் சுடுகாடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கவுதம், 24, சிவா, 23, நவீன்குமார், 23,
ஆகியோர் சரவணனை தடுத்து நிறுத்தி பணம் கேட்டனர்.
அவர் இல்லை என கூறிய
நிலையில், கத்தியை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் இருந்த, 1,500 ரூபாயை
பறித்துக்கொண்டு தப்பினர்.இதுகுறித்து சரவணன் புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரித்து, நேற்று, பணம் பறித்த, 3 பேரையும் கைது செய்தனர்.