/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகை கடை பெண் ஊழியர் உள்பட 3 பேர் மாயம்
/
நகை கடை பெண் ஊழியர் உள்பட 3 பேர் மாயம்
ADDED : செப் 24, 2025 01:31 AM
சேலம் :ஆட்டையாம்பட்டி, பைரோஜியை சேர்ந்தவர் ஜனனி, 20. ஆட்டையாம்பட்டியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிகிறார். கடந்த, 21ல் வீட்டிலிருந்து வெளியேறிய அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், ஜனனியின் தாய் முத்து மணி, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கருப்பூர், தேக்கம்பட்டி வட்டக்காட்டை சேர்ந்த, பெயின்ட் அடிக்கும் தொழிலாளி சுகுமார், 32. இவருக்கும், மனைவி புவனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இதில் மனமுடைந்த சுகுமார், 2 வாரங்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து சுகுமாரின் தாய் பூபதி புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாரமங்கலம், துட்டம்பட்டி பைபாைஸ சேர்ந்தவர் கார்த்திக், 35. சங்ககிரியில் உள்ள லாரி பட்டறையில் பணிபுரிகிறார். மனைவி லாவண்யா, இரு மகள்கள், மகன் உள்ளனர். 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த கார்த்திக், கடந்த, 13 காலை முதல் காணவில்லை. எங்கு தேடியும் காணாததால், லாவண்யா புகார்படி, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.