நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், சேலத்தில் இருந்து சென்னையை நோக்கி, 'ராயல்' என்ற பெயரில், தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு, 12:15 மணிக்கு, ஆத்துார், காட்டுக்கோட்டை மேம்பாலம் வழியே, சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் பின்புறம் லாரி, தொடர்ந்து மினி சரக்கு வேன் மோதின.
இதில், வேன் சாய்ந்தது. அதை ஓட்டி வந்த டிரைவரான, நாமக்கல், ப.வேலுாரை சேர்ந்த, செந்தில்குமார், 52, படுகாயமடைந்தார். அவரை மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆம்னி பஸ், லாரியின் முன்பகுதிகள் சேதமாகின. வேன் சாய்ந்ததும், மற்ற இரு வாகனங்களும் சாலை நடுவே நின்றதால், அச்சாலையில், அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்துார்
ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

