/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டியிடம் 'கவரிங்' நகை பறித்த 2 பேருக்கு வலை
/
மூதாட்டியிடம் 'கவரிங்' நகை பறித்த 2 பேருக்கு வலை
ADDED : அக் 29, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அம்மாபேட்டை, உடையாப்பட்டியை சேர்ந்தவர் கமலா, 70. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வீடு அருகே உள்ள பெட்டிக்கடையில் வெற்றிலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, 2 மர்ம நபர்கள், மூதாட்டி அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர்.
மூதாட்டி கூச்சலிட, மக்கள் விசாரித்து, அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த, போலீசார் விசாரித்ததில், மூதாட்டி அணிந்திருந்தது, 'கவரிங்' நகை என தெரிந்தது. ஆனால் மர்ம நபர்கள், தங்கம் என நினைத்து பறித்துச்சென்றதும் தெரிந்தது. இருப்பினும் போலீசார் விசாரிக்
கின்றனர்.

