/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெயின்டருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
/
பெயின்டருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
பெயின்டருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
பெயின்டருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
ADDED : அக் 29, 2025 01:15 AM
சேலம்,சேலம், ஜான்சன்பேட்டை, கன்னங்காடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன், 29. பெயின்டிங் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு அஸ்தம்பட்டி ஹவுசிங் போர்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, 3 பேர் வந்து, மதியழகனை தகாத வார்த்தையில் திட்டி தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தினர்.
தடுக்க முயன்ற அவரது நண்பர் திவ்யபிரசாந்தையும், கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திவிட்டு தப்பினர். இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதியழகன் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து, கன்னங்காட்டை சேர்ந்த ஜீவானந்தம், 22, என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், முன்விரோத
தகராறில் தாக்கியது
தெரியவந்தது. மேலும், 2 பேரை போலீசார் தேடுகின்றனர்.