/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு '3 ஆண்டு'
/
வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு '3 ஆண்டு'
ADDED : மே 10, 2024 07:33 AM
சேலம் : மல்லுார், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செழியன், 45.
டாஸ்மாக் குடோனில் டிரான்ஸ்போர்ட் மேலாளராக உள்ளார். இவரது வீட்டுக்கு, 2023 மார்ச், 29ல், 'குறி' சொல்வதாக கூறி ஒருவர் வந்துள்ளார். தொடர்ந்து செழியனிடம், 'பூஜை அறைக்கு சென்று கும்பிட்டுவிட்டு, 5 ரூபாய் தாருங்கள்' என கேட்டார். அவரும் அங்கு சென்று திரும்பி வந்தபோது, குறி சொல்வதாக வந்தவரை காணவில்லை. மேலும் வீடு புகுந்து வெள்ளி சங்கிலியை திருடிச்சென்றது தெரிந்தது. மல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டியை சேர்ந்த, பொன்னுவேல், 22, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 6ல் நடந்தது. அதில் பொன்னுவேலுக்கு, 3 ஆண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் கமலக்கண்ணன் நேற்று உத்தரவிட்டார்.