ADDED : ஆக 18, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடியில் உள்ள, பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், 30 பேர் பா.ஜ.,வில் இணையும் விழா நேற்று நடந்தது.
மேட்டுப்பட்டியை சேர்ந்த சீதாராமன் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர், பா.ஜ.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, மாவட்ட தலைவர் சண்முகநாதன், அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய தலைவர் ரேகா ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட செயலர் வெங்கடேஷ், பிரசார பிரிவு மாவட்ட செயலர் குப்பமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் உட-னிருந்தனர்.

