/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3,000 பெண்களை தேர்ந்தெடுக்கவரும் 3ல் வேலைவாய்ப்பு முகாம்
/
3,000 பெண்களை தேர்ந்தெடுக்கவரும் 3ல் வேலைவாய்ப்பு முகாம்
3,000 பெண்களை தேர்ந்தெடுக்கவரும் 3ல் வேலைவாய்ப்பு முகாம்
3,000 பெண்களை தேர்ந்தெடுக்கவரும் 3ல் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : மே 02, 2025 01:09 AM
சேலம்சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில், பெண்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், வரும், 3ல், சேலம் சோனா கல்வி குழும வளாகத்தில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக்கில் நடக்க உள்ளது. காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்கும். அதில் டாடா எலக்ட்ரானிஸ் நிறுவனம், 3,000க்கும் மேற்பட்ட அப்ரண்டீஸ் காலி பணியிடங்களுக்கு, பெண்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில், பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை அறிவியல் பட்டப்படிப்பு(பொறியியல், முதுகலை தவிர்த்து) 2023, 2024 அல்லது 2025ம் ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்ற, 18 முதல், 25 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டும் பங்கேற்கலாம். மாத சம்பளம், 15,500 முதல், 16,000 ரூபாய் வரை வழங்கப்படும். உணவு, தங்கும் விடுதி, போக்குவரத்து போன்ற இதர சலுகைகள் கிடைக்கும். விருப்பம், தகுதி உள்ளவர்கள், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும். விபரங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, 0427 - 2401750 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.