/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கேட்பாரற்று கிடந்த 301 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
/
கேட்பாரற்று கிடந்த 301 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : நவ 22, 2025 01:16 AM
இடைப்பாடி, இடைப்பாடியில், கேட்பாரற்று கிடந்த, 301 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இடைப்பாடி தாலுகா, நைனாம்பட்டி பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இதன் அருகில் உள்ள வீட்டின் பின்புறம், நேற்று முன்தினம் இரவு, 6 மூட்டை ரேஷன் அரிசி கிடந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள், இடைப்பாடி தாசில்தார் வைத்திய லிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இடைப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் மதிஒளி, நைனாம்பட்டி வந்து கேட்பாரற்று கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், இடைப்பாடி சிவில் சப்ளை கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கொண்டு வந்து போட்டது யார் என, தாசில்தார் வைத்தியலிங்கம் விசாரித்து வருகிறார்.

