ADDED : நவ 22, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் சேலம் வீராணம், சின்னனுார் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ஜனனி, 25. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆதிசேஷன் என்ற குழந்தை உள்ளது.
ஜனனி தனியார் மில் ஒன்றில் பணிபுரிகிறார். அங்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கணவர் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் குழந்தையுடன் வெளியே சென்ற ஜனனி, மீண்டும் வீடு திரும்பவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, வீராணம் போலீசில் ரமேஷ் கொடுத்த புகார்படி, போலீசார் தேடி வருகின்றனர்.

