ADDED : மே 03, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : தீவட்டிப்பட்டி கலவரத்தில், 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து சேலம் எஸ்.பி., அருண்கபிலன் அறிக்கை:தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில், இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.
கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஒரு தரப்பினர் தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே பழக்கடைக்கு தீ வைத்தனர். போலீசார் தலையீட்டால், இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரு தரப்பிலும், 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.