/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூலமேட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் உள்பட 31 பேர் காயம்
/
கூலமேட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் உள்பட 31 பேர் காயம்
கூலமேட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் உள்பட 31 பேர் காயம்
கூலமேட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் உள்பட 31 பேர் காயம்
ADDED : ஜன 18, 2025 02:29 AM
ஆத்துார்: கூலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலா கலமாக நடந்த நிலையில், காளைகள் முட்டியதில், 3 பேர் படுகாயம் உள்பட, 31 பேர் காய-மடைந்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. தமிழக சுற்-றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 450 காளைகளின் உரி-மையாளர்கள், 300 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின், 435 காளைகள், 270 வீரர்கள் அனுமதிக்-கப்பட்டனர்.
முதலில் கோவில் காளை, தொடர்ந்து மற்ற காளைகளை அவிழ்த்-துவிட்டனர். துணை முதல்வர் உதயநிதி பெயரில் அவிழ்த்து விடப்பட்ட காளைக்கு, 50,000 ரூபாய் பரிசு அறிவித்தனர். நாமக்கல் கார்த்திக், 22, என்பவர், அந்த காளையை பிடித்து பரிசு பெற்றார். அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், தி.மு.க.,வின், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னது-ரையின் காளைகளுக்கு, மொபைல் போன், பணம் என அறிவித்-தனர். அந்த காளைகள், வீரர்களிடம் பிடிபடவில்லை. தவிர, 5,000, 50,000, 1 லட்சம் ரூபாய், அரை கிலோ வெள்ளி, மொபைல் போன்கள், பைக் என பரிசுகள் அறிவிக்கப்பட்ட காளைகளையும், வீரர்களால் பிடிக்கமுடியவில்லை.
செந்தாரப்பட்டியை சேர்ந்த காளையை அவிழ்த்துவிடும்போது, அந்த காளையை பிடிப்போருக்கு, அதே காளை
பரிசாக வழங்கப்படும் என அறிவித்தனர். நாமக்கல், மங்களபு-ரத்தை சேர்ந்த
சரவணன், 22, காளையை பிடித்தார். ஆனால் காளை உரிமையா-ளரே, அந்த காளையை உடனே ஓட்டிச்சென்றதால், வீரர் தவித்து நின்றார். அவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணி வரை, 430 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இதில் ஆத்துாரை சேர்ந்த பார்வையாளர் பெரியசாமி, 25, வயிறு பகுதியில் காளை முட்டி குடல் சரிந்ததால், சேலம் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லியக்கரை, ஊராண்டிவலசு பார்வைாளர் அபிமன்யு, 23, இடது கண்ணில் காளை குத்தியதில் காயமடைந்தார். வாழப்பாடி, மேட்டுப்பட்டி சரண், 23, வயிற்றின் அடிப்பகுதியில், காளை கொம்பு குத்தி-யதில் படுகாயமடைந்தார். இவர்கள் ஆத்துார் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் என, 28 பேர் லேசான காயம் அடைந்து, மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றனர். மொத்தம், 31 பேர் காயமடைந்தனர். மேலும் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த ஒரு காளை, எல்-லைக்கோட்டை
தாண்டும்போது சுருண்டு விழுந்தது. அந்த காளையை, கால்நடை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். இதனால் அரை மணி நேரம் விழா தடைபட்டது.
மேலும், 50 காளைகள் அழைத்து வரப்பட்ட நிலையில், பதிவு செய்யப் படாததால் விழா குழுவினர் அனுமதிக்கவில்லை. இதனால் உரிமையாளர்கள், விழா குழுவினர் இடையே வாக்கு-வாதம் ஏற்பட, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அ.தி.மு.க.,வின், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
50 மாடுகளுக்கு பரிசு
அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்-கோவன், 50 காளைகளின் உரிமையாளர்கள், 30 வீரர்களுக்கு, 1,000, 2,000, 5,000 ரூபாய் உள்பட, மொத்தம், 2 லட்சம் ரூபாய்க்கு பரிசுத்தொகை வழங்கினார். காளையை அவிழ்த்து-விட்ட இரு பெண்களுக்கு பணம், மொபைல் போன் வழங்-கினார். விழா குழுவினர், 3 பெண்களுக்கு சிறப்பு பரிசு வழங்-கினர்.
பரிசு பொருட்கள் குறைவாக இருந்ததோடு, பலருக்கும், விழா குழுவினர் மூலம் பரிசுகள்
வழங்கப்படாததால், காளை உரிமையாளர்கள், சிறிது நேரம் வாக்-குவாதம்
செய்துவிட்டு சென்றனர்.