/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வுஒரே அரசு பள்ளியில் 31 பேர் தேர்ச்சி
/
ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வுஒரே அரசு பள்ளியில் 31 பேர் தேர்ச்சி
ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வுஒரே அரசு பள்ளியில் 31 பேர் தேர்ச்சி
ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வுஒரே அரசு பள்ளியில் 31 பேர் தேர்ச்சி
ADDED : ஏப் 17, 2025 01:25 AM
சேலம்:அரசு, அதன் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் தேசிய திறனாய்வு தேர்வு(என்.எம்.எம்.எஸ்.,) நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, 9 முதல் பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறியதாவது: நடப்பாண்டு கல்வியாண்டில், சேலம் மாவட்டத்தில், 479 பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 2ம் இடம் பிடித்தனர். இதில் இடைப்பாடி, செட்டிமாங்குறிச்சி அரசு மாதிரி பள்ளியில், 31 பேர் அதிகபட்சமாக தேர்ச்சி பெற்றனர். அதேபோல் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 17 பேர், கோமாளியூர், நெத்திமேடு அரசு உதவி பெறும் பள்ளியில் தலா 13; பொம்மியாம்பட்டி - 11; சேலம் அரசு உதவி பெறும் பள்ளி - 10; ஆத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி - 7 உள்பட, 479 பேர் அடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.