/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் பெயர் சேர்க்க 2 நாட்களில் 31,811 மனு வழங்கல்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் பெயர் சேர்க்க 2 நாட்களில் 31,811 மனு வழங்கல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் பெயர் சேர்க்க 2 நாட்களில் 31,811 மனு வழங்கல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் பெயர் சேர்க்க 2 நாட்களில் 31,811 மனு வழங்கல்
ADDED : டிச 29, 2025 09:56 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் இரு நாட்கள் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில், பெயர் சேர்க்க, 31,811 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த, 19ல் வெளியிடப்பட்டு, சிறப்பு தீவிர திருத்த பணி, ஜன., 18 வரை நடக்கிறது. அதை செம்மைப்படுத்த, 2வது சிறப்பு முகாம், நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், 1,346 மையங்களுக்கு உட்பட்ட, 3,468 ஓட்டுச்சாவடிகளில், காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை முகாம் நடந்தது.
பெயர் சேர்க்க, 16,736 பேர் விண்ணப்பித்தனர். அதில் அதிகபட்சம், 2,111 மனுக்கள், சேலம் வடக்கு தொகுதியில் வரப்பெற்றது. பெயர் நீக்க, 381 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு, முகவரி மாற்றம், மாற்றுத்திறனாளி என குறிப்பிடுதல் உள்ளிட்டவைக்கு, 8,453 பேர் என, மொத்தம், 25,570 பேர் விண்ணப்பித்துள்ளனர்.சட்டசபை தொகுதி வாரியாக பெறப்பட்ட மொத்த மனுக்கள் விபரம் வருமாறு(அடைப்பில் பெயர் சேர்க்கைக்கான மனு விபர எண்ணிக்கை): கெங்கவல்லி தனி - 1,787(1,166); ஆத்துார் தனி - 2,027(1,252); ஏற்காடு தனி - 1,908(1,256); ஓமலுார் - 1,986(1,210); மேட்டூர் - 2,647(1,665); இடைப்பாடி - 3,015(1,568); சங்ககிரி - 1,673(1,141); சேலம் மேற்கு - 2,526(1,956); சேலம் வடக்கு - 2,992(2,111); சேலம் தெற்கு - 2,520(2,004); வீரபாண்டி - 2,489(1,407).
நேற்று முன்தினம் நடந்த சிறப்பு முகாமில், 20,874 மனுக்கள் வழங்கப்பட்டன. இத்துடன் சேர்த்து, இரு நாட்கள் நடந்த முகாமில், மொத்தம், 46,444 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 31,811 பேர்; பெயர் நீக்க, 693; குடியிருப்பு மாற்றம், முகவரி திருத்தம், மாற்றுத்திறனாளி என குறிப்பிடுதல் போன்றவற்றுக்கு, 13,940 பேர் மனு அளித்துள்ளனர். அடுத்த சிறப்பு முகாம், வரும் ஜன., 3, 4ல் நடக்க உள்ளது.

