/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில கபடி போட்டி 32 அணிகள் பங்கேற்பு
/
மாநில கபடி போட்டி 32 அணிகள் பங்கேற்பு
ADDED : நவ 28, 2024 06:52 AM
ஓமலுார்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, தி.மு.க.,வின், ஓமலுார் கிழக்கு ஒன்றியம், ஓமலுார் பேரூர் சார்பில், அங்குள்ள வேலாசாமி பள்ளி மைதானத்தில் மாநில ஆண்கள் கபடி போட்டி நேற்று இரவு தொடங்கியது. மின்னொ-ளியில், 3 நாள் நடக்கும் போட்டியில், சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, தர்மபுரி
உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 32 அணிகள் பங்கேற்றுள்ளன. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.,
பொருளாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். கிழக்கு ஒன்-றிய செயலர் ரமேஷ், மேற்கு ஒன்றிய செயலர்
செல்வகுமரன், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, ஓமலுார் டவுன் பஞ்-சாயத்து தலைவி
செல்வராணி, நகர செயலர் ரவிச்சந்திரன் உள்-ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.