/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிதி நிறுவனம், பூண்டு கடையில் பகலில் ரூ.3.40 லட்சம் திருட்டு
/
நிதி நிறுவனம், பூண்டு கடையில் பகலில் ரூ.3.40 லட்சம் திருட்டு
நிதி நிறுவனம், பூண்டு கடையில் பகலில் ரூ.3.40 லட்சம் திருட்டு
நிதி நிறுவனம், பூண்டு கடையில் பகலில் ரூ.3.40 லட்சம் திருட்டு
ADDED : மே 09, 2024 06:41 AM
சேலம் : சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது.
அதை நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு பூட்டிவிட்டு, ஊழியர்கள் சாப்பிட சென்றனர். 2:10க்கு, இரு ஸ்கூட்டியில் வந்த, 3 பேர், நிதி நிறுவன பூட்டை உடைத்து, 2.70 லட்சம் ரூபாயை திருடிச்சென்றனர். அதேபோல் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 42. காரிப்பட்டியில் பூண்டு கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் அவரும் கடையை பூட்டிவிட்டு சாப்பிட சென்ற நிலையில், கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், 70,000 ரூபாயை திருடிச்சென்றனர். நிதி நிறுவனத்தினர் புகார்படி அம்மாபேட்டை போலீசாரும், பூண்டு வியாபாரி புகார்படி காரிப்பட்டி போலீசாரும் விசாரிக்கின்றனர்.