/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3,460 புது ரேஷன் கார்டு தயார் விண்ணப்பித்தோர் பெறலாம்
/
3,460 புது ரேஷன் கார்டு தயார் விண்ணப்பித்தோர் பெறலாம்
3,460 புது ரேஷன் கார்டு தயார் விண்ணப்பித்தோர் பெறலாம்
3,460 புது ரேஷன் கார்டு தயார் விண்ணப்பித்தோர் பெறலாம்
ADDED : மார் 18, 2024 04:02 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் 2023 மார்ச் முதல் ஜூலை வரை, ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியான, 3,460 பேருக்கு கார்டு வரப்பெற்று, அவை, 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
அதில் அதிகபட்சம் சேலம் தாலுகாவுக்கு, 484, ஓமலுார், 380, சேலம் மேற்கு, 321, மேட்டூர், 298, சேலம் தெற்கு, 283, வாழப்பாடி, 281, தலைவாசல், 276, இடைப்பாடி, 227, சங்ககிரி, 196, காடையாம்பட்டி, 188, ஆத்துார், 187, பெத்தநாயக்கன்பாளையம், 164, கெங்கவல்லி, 145, ஏற்காடு, 30 என வரப்பெற்ற கார்டுகள் முறையே, சம்பந்தப்பட்ட தாலுகாலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதனால் விண்ணப்பித்த பயனாளிகள், சம்பந்தப்பட்ட தாலுகாவுக்கு சென்று வட்ட வழங்கல் அலுவலரிடம் ரேஷன் கார்டை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில், 2023 ஆகஸ்ட் முதல், தற்போது வரை புது கார்டுக்கு விண்ணப்பித்துள்ள, 8,500க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் அரசு ஒப்புதல் பெற்று தகுதியானவர்களுக்கு புது ரேஷன் கார்டு வினியோகம் இருக்கும்' என்றனர்.

