ADDED : மே 19, 2025 02:09 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாய குழுமம், சேலம் கேலக்ஸி ரோட்டரி சங்கம், தனியார் கண் மருத்துவமனை சார்பில், இலவச
கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. ஏராளமான மக்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரை, கண் கண்ணாடி வழங்-கினர். இலவச கண் அறுவை சிகிச்சைக்கு, 35 பேர் தேர்வு செய்து, சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
சேலம் தனியார் ரத்த வங்கி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. 35க்கும் மேற்பட்டோர், ரத்த தானம் செய்தனர். சேலம் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில், பனமரத்துப்பட்டியை சேர்ந்த மாற்றுத்-திறனாளிக்கு, 8,000 ரூபாய் மதிப்பில் சக்கர நாற்காலி வழங்கப்-பட்டது. சங்கத்தலைவர் பொன்னுசாமி, ரோட்டரி சமுதாய குழும ஒருங்கிணைப்பாளர் குமரேஷ், ரத்த வங்கி தலைவர் வசந்த் புஷல்கர், பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாய குழும நிர்-வாகிகள் பங்கேற்றனர்