ADDED : டிச 25, 2024 02:21 AM
சேலம், டிச. 25-
சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி, மிஷின் கிணறு தெருவை சேர்ந்த, பட்டு சேலை கடையில் பணிபுரிபவர் மாணிக்கம். இவரது மனைவி கலைவாணி, 30. நேற்று முன்தினம் மாணிக்கம் வேலைக்கு சென்ற நிலையில், கலைவாணி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது வந்த ஒருவர், 'வீட்டில் பிரச்னை உள்ளது. அதற்கு பூஜை செய்தால் தீர்வு காணலாம்' என கூறியுள்ளார். அதை நம்பிய கலைவாணி, பூஜைக்கு ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஒரு சொம்பில் தண்ணீரை நிரப்பி, எலுமிச்சை பழத்தை அதனுள் போட்டு, பூஜை செய்துள்ளார். தொடர்ந்து அந்த சொம்பில் தாலி சங்கிலியை கழற்றி போட கூறியுள்ளார். அவரும், 3.5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி, சொம்பில் போட்டுள்ளார். பின் கை, கால் கழுவி விட்டு வந்து, சங்கிலியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார். அதற்கு அவர் சென்றதும், சொம்பில் இருந்த சங்கிலியை எடுத்துக்கொண்டு, மர்ம நபர் ஓடிவிட்டார். திரும்பி வந்த கலைவாணி, சங்கிலி இல்லாததால் அதிர்ச்சியடைந்து, கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், போலி மந்திரவாதியை தேடி வருகின்றனர்.

