ADDED : நவ 11, 2024 07:09 AM
சேலம் : பள்ளிசாரா, வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம், 5 ஆண்டு திட்டமாக செயல்படுகிறது. 2024 - 2025ம் கல்வியாண்டில் சேலம் மாவட்டத்துக்கு இத்திட்டத்தில் முதல் கட்டமாக, 9,610 ஆண்கள், 25,390 பெண்கள் என, 35,000 கற்போர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இணை இயக்குனர் குமார், சி.இ.ஓ., கபீர், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'இத்திட்டம், 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கல்வியை வழங்கி, 'கல்வியறிவு இல்லாதவர் இல்லை' என்ற நிலையை உருவாக்க தொடக்கப்பட்டது. மாவட்டத்தில், 1,782 மையங்களில், 35,000 பேர், கற்போர் தேர்வு எழுதினர்' என்றனர்.