ADDED : டிச 04, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், டிச. 4--
சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனைச்சாவடி வழியே, காரில் 'குட்கா' கடத்தி வருவதாக, நேற்று தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் சோதனைச்சாவடி அருகே நின்று போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 'சைலோ' காரை, சற்று முன்னதாக நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் இறங்கி ஓடிவிட்டார். போலீசார் காரை சோதனை செய்தபோது அதில், 363 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. தொடர்ந்து 2.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலையை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். பின் தப்பி ஓடியவர் குறித்து விசாரிக்கின்றனர்.