ADDED : ஆக 14, 2025 02:46 AM
பள்ளிப்பாளையம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், கடந்த ஜூலை முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாசன நீரை பயன்படுத்தி, பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், 10,000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. தற்போது, விவசாயிகள் நெல் சாகுபடி பணியை துவக்கியுள்ளனர். பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என, பள்ளிப்பாளையம் வட்டார வேளாண்மைதுறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதில், 'வேளாண்மை அலுவகத்தில் பி.பி.டி., ஐ.ஆர்., 20, வெள்ளை பொன்னி கோ-55, உள்ளிட்ட அனைத்து ரகம் கொண்ட, 37 டன் விதை நெல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள், குமாரபாளையம், வெப்படை வேளாண்மை விரிவாக்கம் மையம், பள்ளிப்பாளையம் அலுவலகங்களில் தங்களது ஆதார் எண், சர்வே எண் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்' என, தெரிவித்துள்ளார்.