/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
370 டன் காய்கறிகள் ரூ.1.88 கோடிக்கு விற்பனை
/
370 டன் காய்கறிகள் ரூ.1.88 கோடிக்கு விற்பனை
ADDED : ஜன 14, 2025 02:54 AM
சேலம்: சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், 370 டன் காய்கறிகள், பழங்கள், ரூ.1.88 கோடிக்கு விற்பனையானது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, ஆத்துார், ஜல-கண்டாபுரம் உள்பட, 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்-பட்டு வருகின்றன. இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்து
காணப்பட்டது. சந்தைகளில் காய்கறிகள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையானது. 13 உழவர் சந்தைகளில், 1,178 விவசாயிகள், 370 டன் காய்கறிகள், பழங்கள், பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதை, 91
ஆயிரத்து 535 பேர், ரூ.1.88 கோடிக்கு வாங்கி சென்றனர்.தாதகாப்பட்டி உழவர் சந்தையில் அதிக பட்சமாக, ரூ.37.36 லட்-சத்திற்கும், குறைந்த பட்சமாக மேச்சேரி சந்தையில், ரூ.2.34 லட்-சத்திற்கும் விற்பனையானது. அதேபோல் பால் மார்க்கெட், ஆற்-றோரம் காய்கறி மார்க்கெட்
உள்ளிட்ட இடங்களிலும் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் காணப்பட்டது.