/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 3ம் ஆண்டு நினைவஞ்சலி
/
முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 3ம் ஆண்டு நினைவஞ்சலி
ADDED : அக் 03, 2024 06:42 AM
வீரபாண்டி : வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாவின், 3ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பூலாவரியில் உள்ள அவரது சமாதியில், தி.மு.க.,வின் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமையில், ராஜாவின் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள், மாலை அணிவித்து மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.
பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலர் சுரேஷ்குமார், ராஜாவின் மனைவி சாந்தி, மகளான, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி, செந்தில் ஆனந்த், கிருத்திகா ஜெயரத்னா, மகேஸ்வரி காசி, நிர்மலா மதிவாணன் உள்ளிட்ட குடும்பத்தினர், ராஜகணபதி மெடிக்கல்ஸ் பாண்டித்துரை, குணசேகரன் உள்ளிட்ட கட்சியினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.