/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜோதிடர் மீது தாக்குதல் 4 பேர் அதிரடி கைது
/
ஜோதிடர் மீது தாக்குதல் 4 பேர் அதிரடி கைது
ADDED : ஜன 21, 2025 06:13 AM
சேலம்: சேலம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் குமார், 40, ஜோதிடர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்-ததால், ஜோதிடரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் எருமாபாளையம் பகுதியில் ஜோதிடர் நடந்து சென்ற போது, அங்கு வந்த பெண்ணின் உற-வினர் உள்ளிட்ட ஐந்து பேர் கும்பல், ஜோதிடரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். பின்,
கிரிக்கெட் மட்டையால் ஜோதிடரை தாக்கியதில் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்-தனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த விக்னேஷ், 24. இசக்கிமுத்து, 55, பரமசிவம், 46, ஹரிகர-சுதன், 27, ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய மோகன் என்பவரை தேடி வருகின்றனர்.

