/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது
/
வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது
ADDED : ஏப் 30, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம், கிச்சிப்பாளையம் அருகே எருமாபாளையம் ஏரிக்கரை முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சூர்யா, 21. சீலநாயக்கன்பட்டியில் உள்ள பழைய இரும்பு கடையில் பணிபுரிகிறார்.
கடந்த 27ல், ஏரிக்கரையில் சூர்யாவிடம், 4 பேர் தகராறில் ஈடுபட்டதோடு, பீர் பாட்டிலால் மார்பு, தலையில் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, சுண்ணாம்பு சூளையை சேர்ந்த மதன், 25, காந்தி நகர் குருபிரசாத், 22, மற்றும், 17 வயது சிறுவர்கள் இருவரை கைது
செய்தனர்.

