ADDED : ஆக 20, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், அந்தேரிப்பட்டியை சேர்ந்தவர் மாதவன், 25. இவர் அதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, 6 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 5,000 ரூபாயை பறித்துக்கொண்டனர்.
இதுகுறித்து மாதவன் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, ஹவுசிங் போர்டை சேர்ந்த கவுதம், 25, ஆசிக் அலி, 25, தினேஷ், 26, மோகன்ராஜ், 25, ஆகியோரை நேற்று கைது செய்து, மேலும் இருவரை தேடுகின்றனர்.