/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காயம் அடைந்த இளைஞர் பலி பட்டாசு வெடித்த 4 பேர் கைது
/
காயம் அடைந்த இளைஞர் பலி பட்டாசு வெடித்த 4 பேர் கைது
காயம் அடைந்த இளைஞர் பலி பட்டாசு வெடித்த 4 பேர் கைது
காயம் அடைந்த இளைஞர் பலி பட்டாசு வெடித்த 4 பேர் கைது
ADDED : ஜூன் 04, 2025 01:59 AM
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், தும்பலை சேர்ந்தவர் மாதேஷ், 60. இவர் இறந்த நிலையில், இறுதி ஊர்வலம் கடந்த மே, 17ல் நடந்தது. அதில் வெடிக்க, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா, வெடி பொருட்களை, மூட்டையில் கொண்டு சென்றார்.
அப்போது, அதே ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது, சூர்யா கொண்டு சென்ற வெடிபொருட்கள் மீது தீப்பொறி பட்டது.
இதில் பல்வேறு பட்டாசுகளும் வெடித்து சிதற, சூர்யா, 21, அவரது அருகே இருந்த சதீஷ், 28, காயம் அடைந்தனர். மக்கள் மீட்டு, அவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடந்த, 1ல் சூர்யா உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, பட்டாசு வெடித்து விபத்து ஏற்படுத்திய, கருமந்துறை சகாதேவன், 35, தும்பல் கமல்ராஜா, 39, மோகன்ராஜ், 40, சேதுரத்தினம், 42, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.