/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.2 லட்சத்தில் ஒயர் திருடிய 4 பேர் கைது
/
ரூ.2 லட்சத்தில் ஒயர் திருடிய 4 பேர் கைது
ADDED : ஜூலை 27, 2025 12:49 AM
ஆத்துார், ஆத்துார், ரயிலடி தெரு வழியே, பி.எஸ்.என்.எல்., கேபிள் ஒயர் செல்கிறது. கடந்த, 19 இரவு, 11:30 மணிக்கு, கெங்கவல்லியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., டவர் செயல்படவில்லை. மறுநாள் ஆய்வு செய்த
போது, ஆத்துார், ரயிலடி தெருவில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 மீட்டர் நீள காப்பர் கேபிள் ஒயர்கள் வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து, ஆத்துார் உட்கோட்ட பொறியாளர் குமாரசாமி புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்ததில், தர்மபுரி மாவட்டம் பாப்பி
ரெட்டிப்பட்டியை சேர்ந்த செல்லக்கண்ணு, 32, கோவிந்தன், 25, ரஞ்சித்குமார், 28, வெங்கடேசன், 27, கேபிள் ஒயரை திருடியதும், அவர்கள் கூலித்தொழிலாளர்கள் என்பதும் தெரிந்தது. நேற்று, 4 பேரையும், போலீசார் கைது செய்தனர்.