/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்தூரில் ஆடு திருடர்கள் 4 பேர் கைது
/
ஆத்தூரில் ஆடு திருடர்கள் 4 பேர் கைது
ADDED : ஆக 19, 2024 12:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர், தெற்கு காடு பகுதி சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 45). இவர் ஆடுகளை வளர்த்து வந்த நிலையில், மர்ம நபர்கள், ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து, ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்து போது மொபட்டில் வந்த நான்கு பேர் ஆடு திருடி கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.
விசாரணையில் ஆத்தூர், மந்தைவெளி பகுதி சேர்ந்த சதீஷ்குமார், அம்மாசி கொடியரசு, வீரமுத்து, ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை, ஆத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இதில் சதீஷ்குமார் என்பவர் மீது கொலை வழக்கு உள்பட நான்கு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

