/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரபுரநாதர் கோவிலில் இன்று விடிய விடிய 4 கால பூஜை
/
கரபுரநாதர் கோவிலில் இன்று விடிய விடிய 4 கால பூஜை
ADDED : பிப் 26, 2025 07:21 AM
வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில், பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (பிப்.,26) இரவு விடிய விடிய நான்கு கால அபிேஷக சிறப்பு பூஜை நடக்கவுள்ளது.
மாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நேற்று சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் மூலவர் கரபுரநாதர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கள பொருட்களால் அபிேஷகம் செய்து, சர்வ அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்து பூஜை நடத்தப்பட்டது.
கரபுரநாதர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, இன்றிரவு 8:00 முதல் காலை 6:00 மணி வரை விடிய விடிய மூலவர் கரபுரநாதருக்கு அபிேஷகம் செய்யப்படவுள்ளது. இரவு 8:00 மணிக்கு முதல் கால பூஜை, 10:30 மணிக்கு இரண்டாம் காலம், நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் காலம் மற்றும் அதிகாலை 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை என விடிய விடிய கரபுரநாதருக்கு பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கள பொருட்களால் அபிேஷகம் நடத்தப்படவுள்ளது.
மேலும் கோவில் வளாகத்தில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. நான்கு கால பூஜை முடிந்த பின் நாளை (பிப்.,27) காலை சர்வ அலங்காரத்தில் கரபுரநாதருக்கு மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.