/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 4 பேர் காயம்
/
சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 4 பேர் காயம்
சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 4 பேர் காயம்
சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 4 பேர் காயம்
ADDED : ஜன 31, 2025 02:48 AM
இடைப்பாடி: தேவூர் அருகே மயிலம்பட்டியை சேர்ந்தவர் நிலச்சக்கரவர்த்தி, 38. உடல்நிலை சரியின்றி வீட்டில் இருந்தார்.
அவரை, ஆம்னி ஆம்புலன்ஸ் மூலம், இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவ-மனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை, ஆம்புலன்சில் எடுத்துக்கொண்டு, நேற்று முன்தினம் குடும்பத்தினர், வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். இரவு, 8:30 மணிக்கு தேவூர் அருகே கோணக்கழத்தானுார் வளைவு சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சடலத்துடன் வந்த, உமா-மகேஸ்வரி, தீபா, பாப்பாத்தி, கவின் ஆகியோர் காயம் அடைந்து, தேவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்-பட்டனர். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.