/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயி அடித்துக்கொலை 4 பேரிடம் விசாரணை
/
விவசாயி அடித்துக்கொலை 4 பேரிடம் விசாரணை
ADDED : டிச 16, 2024 04:11 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே சித்திரபாளையம், காட்டுவளவை சேர்ந்தவர் கோவிந்தன், 55. விவசாயி. அருகே வசிப்பவர் குப்புசாமி, 55. இந்த இரு குடும்பத்தினர் இடையே, விவசாய நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மாலை, 6:00 மணிக்கு கோவிந்தன், விவசாய நிலத்தை உழுவதற்கு டிராக்டரை அழைத்து வந்தார். அப்போது குப்புசாமி மகன் வெங்கடாசலம், நிலம் உழவு செய்வதை தடுத்து, டிராக்டர் மீது ஏறி சாவியை எடுத்தார். இதில் கோவிந்தன், வெங்கடாசலம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாக மாறியது.
அப்போது வெங்கடாசலத்தின் பெற்றோர் குப்புசாமி, ராஜாமணி, மனைவி ராஜகிளி ஆகியோர், கோவிந்தனை மரக்கட்டை, கல்லால் தாக்கியுள்ளனர். இதில் கோவிந்தன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொங்கணாபுரம் போலீசார், குப்புசாமி, 55, ராஜா-மணி, 50, வெங்கடாசலம், 32, ராஜகிளி, 27, என, ஒரே குடும்-பத்தில், 4 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

